உக்ரைனில் பிரித்தானிய ஏவுகணை தாக்குதல்., காயமடைந்த வடகொரிய ஜெனரல்
க்ரைனில் நடந்துவரும் போரில் வடகொரிய ஜெனரல் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்காக போராடிய வடகொரியாவின் ஒரு உயர்நிலை ஜெனரல், உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் காயமடைந்ததாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குர்ஸ்க் எல்லை பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஜெனரல், ரஷியாவின் படைத்தளவாட கட்டுப்பாட்டுக்காக மையமாக இருந்த ஒரு இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
அங்கு பியாங்க்யாங்கின் ஆயிரக்கணக்கான படைகள் உக்ரைனின் தாக்குதலை தடுக்க அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல், பிரித்தானியாவின் ஸ்டார்ம் ஷாடோ ஏவுகணைகள் (British Storm Shadow missiles) உதவியுடன் நடத்தப்பட்டது.
மேலும், ரஷியா வடகொரியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் வழங்கி வருவதாகவும் இது சர்வதேச தடைகளை மீறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னணியில், வடகொரிய தலைவர் கிம் ஜொங்-உன் அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்டித்துக் கூறியதோடு, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போரின் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளார்.
பியாங்க்யாங்கில் நடைபெற்ற ஒரு பாதுகாப்புக் கண்காட்சியில் கிம், வடகொரியாவின் அணு ஆயுதங்களை மேலும் வலுப்படுத்துவதே பாதுகாப்பு உறுதி என குறிப்பிட்டார்.