உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 2 பேர் பலி! 12 நபர் படுகாயம்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை வடகிழக்கு உக்ரைனிய நகரான சுமி மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் 12 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் 12 அடுக்குமாடி குடியிருப்புகள், 5 தனியார் கட்டிடங்கள், கடைகள் மற்றும் 3 கார்கள் ட்ரோன்கள் தாக்குதல்கள் சேதமடைந்துள்ளன.
உக்ரைனிய நகரான சுமி-யின் பிராந்திய கவர்னர் வோலோடிமிர் ஆர்டியுக் வழங்கிய தகவலில், ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்த நகரங்களின் உள்கட்டமைப்புகளை சிதைத்துள்ளன.