;
Athirady Tamil News

பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து!

0

பாகிஸ்தானில் பிச்சை எடுப்பதாக கூறிக் கொள்ளும் குடும்பம் ஒன்று சுமார் 20,000 பேருக்கு பிரமாண்டமான விருந்து வழங்கி பிரமிக்க வைத்துள்ளது.

புரியாத பிரம்மாண்ட விருந்து
பிச்சை எடுத்து பிழைப்பதாக சொல்லிக் கொள்ளும் பாகிஸ்தானில் குஜ்ரான்வாலாவைச்(Gujranwala) சேர்ந்த குடும்பம் ஒன்று சுமார் 20,000 பேருக்கு பிரமாண்டமான விருந்து வழங்கியுள்ளது.

அவர்களது குடும்பத்தை சேர்ந்த பாட்டி ஒருவர் உயிரிழந்த 40வது நாளையொட்டி நடத்தப்பட்ட இந்த ஆடம்பர நிகழ்ச்சி 20,000 பேருக்கு பிரமாண்டமான விருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இணையத்தில் பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1.25 கோடி செலவு
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்தின் தகவல் படி, இந்த பிரமாண்ட விருந்து நிகழ்ச்சிக்கு சுமார் 1.25 கோடி பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 38 லட்சம் ரூபாய்) செலவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ரஹ்வாலி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு 2,000 வாகனங்கள் மூலம் விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மேலும் அங்கு வழங்கப்பட்ட உணவு விருந்தில், சிறி பாயே, மட்டன், முரப்பா, நான் மட்டர் கஞ்சி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.

அதிகமான கூட்டத்தை கருத்தில் கொண்டு, 250 ஆடுகள் பலியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வைரல்
ஆடம்பரமான விருந்து மற்றும் அதிகமான விருந்தினர்களைக் காட்டும் வீடியோக்கள் விரைவாக வைரலாகி, இணைய தளத்தில் பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது.

நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு குடும்பம் இவ்வளவு ஆடம்பரமான நிகழ்ச்சியை எப்படி நடத்த முடியும் என்று பலரும் குழம்பியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.