;
Athirady Tamil News

வைத்தியசாலையில் திடீரென துப்பரவுப் பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர்!

0

புதிய சுகாதார அமைச்சரான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்று (22-11-2024) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை சந்தித்து வைத்தியசாலை தொடர்பான பிரச்சனைகளை அறிந்து கொண்டதுடன் வைத்தியசாலை விடுதிகளை பார்வையிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

பணிப்பாளர் மற்றும் சில பணியாளர்களுடன் மேற்பார்வை செய்வற்காக அமைச்சர் பல விடுதிகளை பார்வையிட்டார் அதில் சீரற்ற விடுதி ஒன்றுக்கு சென்று பழைய விடுதிகளுள் ஒன்றான 43-வது விடுதியை பார்வையிட்டார்.

அமைச்சர் அந்த விடுதியின் படுக்கைகளின் இடையே நடந்து, நேராக கழிப்பறையை சென்று பார்வையிட்டுள்ளார்.

கழிப்பறை மிகவும் மோசமான நிலையில் இருந்ததுடன் துர்நாற்றம் வீசியதோடு, இரண்டு நாள் கழிவுகள் மட்டுமின்றி, அன்றைய நாள் காலை சேகரிக்கப்பட்ட கழிவுகளும் கதவு வரையிலும் சிதறிக் கிடந்தமையை அவதானித்துள்ளார்.

அமைச்சர் அங்கு கடமையில் இருந்தவர்களிடம் எவ்வித கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. வைத்தியசாலை பணிப்பாளர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றதை அவதானிக்க முடிந்தது.

அந்த விடுதியின் பொறுப்பான வைத்தியர், அந் நாளில் கழிப்பறை துப்புரவாளர் வேலைக்கு சமூகம் தரவில்லை என்று கூறினார்.

ஒரு தாதியர் கீழே உள்ள மற்றொரு விடுதியின் துப்புரவுப் பணியாளரை அழைத்துக் கொண்டுவர சென்றார்.

அமைச்சர் சுற்றி பார்த்த போது துப்பரவு செய்வதற்கான தூரிகையை கண்டுகொண்டார். உடனே கழிப்பறை துப்பரவு செய்வதற்கான தூரிகையும் வாளியையும் எடுத்துக்கொண்டு அவர் துப்புரவு பணியினை மேற்கொள்ள தொடங்கினார்.

ஒரு உதவியாளர் உடனடியாக அமைச்சர் கையில் இருந்து தூரிகையை பெறச் சென்றார். ஆனால் அமைச்சர் தூரிகையை அவரிடம் வழங்காது. அவர் தன் துப்புரவு பணியை தொடர்ந்தார்.

பணிப்பாளர், விடுதியின் பணியாளர்கள், மருத்துவர் மற்றும் தாதியர்கள் அச்சத்தில் உறைந்து நின்றனர். அந் நிகழ்வு 15 நிமிடங்களில் முடிவடைந்தது.

அமைச்சர் கழிப்பறையை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்துவிட்டு, கைகளை சுத்தம் செய்து கொண்டு தனது பார்வையையத் தொடர்ந்தார்.

அவர் கழிப்பறை சம்பந்தமாக எந்தவொரு ஒரு வார்த்தையோ அல்லது முறைப்பாடு செய்யாது அங்கிருந்து சென்றார்.

இவ் விடயம் கண்டி போதனா வைத்தியசாலையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.