;
Athirady Tamil News

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

0

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான (G.C.E A/L Exam) ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையானது நாளை மறுதினம் (25.11.2024) ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் முதல் ஆறு நாட்களுக்குத் தேவையான வினாத்தாள்கள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைக்கு தோற்றவுள்ளோர்

அத்துடன் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையானது 2, 312 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முறை உயர்தர பரீட்சைக்காக தோற்றவுள்ள 333,183 பேரில் பாடசாலை பரீட்சார்த்திகள் 253, 380 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 79, 795 பேரும் அடங்குகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்தரப் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பரீட்சைகளுக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது, விநியோகிப்பது போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.