காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் அரங்கேற்றிய கொடூர தாக்குதல்!
காசாவிலுள்ள (Gaza) மருத்துவமனை மீது இஸ்ரேல் (Israel) நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ஹமாஸ் (Hamas) போர் கடந்த ஆண்டு முதல் ஆரம்பமாகி தற்போது வரை நடைபெறுகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், காசா முனையில் இதுவரை 44 ஆயிரத்து 056 பேர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானத் தாக்குதல்
இவ்வாறான நிலையில் நேற்றையதினம் (22.11.2024) காசாவிலுள்ள மருத்துவமனைமீது இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 துணை மருத்துவ பணியாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச அரசியல், நீண்ட கால முரண்கள் என பல்வேறு காரணங்களை கூறி தாக்குதல் நடத்துவது, தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மற்றும் போர் என்ற பெயரில் அப்பாவி உயிர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படுவது உலக அமைதியை சீர்குலைத்து வருகிறது.