சீனா to மெல்போர்ன்….காதலிக்காக ஒவ்வொரு வாரமும் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் காதலன்!
சீன மாணவர் ஒருவர் தனது காதலியை சந்திப்பதற்காக வாரத்தின் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு பறப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீன மாணவரின் காதல் அர்ப்பணிப்பு
சீனாவை சேர்ந்த 28 வயது சூ குவாங்லி(Xu Guangli) என்ற மாணவர் தன்னுடைய நீண்ட தூர காதலையும், RMIT பல்கலைக்கழகத்தில் கலை மேலாண்மையில் முதுகலைப் பட்டப்படிப்பையும் அர்ப்பணிப்புடன் சமாளித்து வெற்றி கொண்டுள்ளார்.
அதாவது தன்னுடைய பட்டப்படிப்புக்கு மத்தியில் தனது காதலியை சந்திப்பதற்காக வாரத்தின் ஒவ்வொரு விடுமுறை தினத்திலும் சூ குவாங்லி(Xu Guangli ) சீனாவின் ஷான்டாங் நகரில் இருந்து மெல்போர்ன் பறந்துள்ளார்.
சூ குவாங்லி-யின் இந்த பயணம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 11 மாதங்கள் வெற்றிகரமாக இதனை செய்து காட்டியுள்ளார்.
சூ குவாங்லி-யின் ஒவ்வொரு பயணமும் 3 நாட்கள் அளவை கொண்டு இருந்துள்ளது.
அவரது பயணம் அதிகாலை தொடங்கி, தேஜோவில் இருந்து ஜினானுக்குச் சென்று, அங்கிருந்து மெல்போர்னுக்கு விமானம் ஏறுவதுடன், அங்கு வாராந்திர வகுப்புகளை முடித்து விட்டு மீண்டும் அதே வழியில் தனது பயணத்தில் திரும்பியுள்ளார்.
இவற்றின் போது செலவுகளை குறைக்க சூ குவாங்லி நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார்.
செலவினங்கள்
இந்த அசாதாரண பயணத்தின் நிதிச் செலவு குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது, அதாவது ஒவ்வொரு பயணத்துக்கும் 6,700 யுவான் (சுமார் ரூ. 77,000) செலவு ஆகியுள்ளது.
இதில் விமான டிக்கெட்டுகள், டாக்சி கட்டணங்கள் மற்றும் உணவுக்கான செலவுகள் அடங்கும்.
அதிக செலவு இருந்தபோதிலும், சூ குவாங்லி-யின் காதல் மீதான அர்ப்பணிப்பு மற்றும் வீட்டில் சமைத்த உணவின் மகிழ்ச்சி ஆகியவற்றை மகிழ்ச்சியாக கருதியுள்ளார்.
சமூக ஊடக பயனர்கள் சூ குவாங்லி-யின் அர்ப்பணிப்பால் வியந்து, அவரது சகிப்புத்தன்மை மற்றும் அசைக்க முடியாத காதல் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.