;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் அதிக சம்பள வேலையை விட்டு IAAS கனவை நிறைவேற்றிய இந்திய பெண்

0

UPSC தேர்வில் வெற்றி பெறுவது பலரின் கனவாக உள்ளது. அப்படியொரு பாரிய கனவை நிறைவேற்றிகொண்டவர் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த அம்பிகா ரைனா (Ambika Raina).

யார் இந்த அம்பிகா ரைனா?
அம்பிகா ரைனா, இந்திய ராணுவ மேஜர் ஜெனரலின் மகளாக பிறந்தார். தனது தந்தையின் மாற்றுப்பணி காரணமாக பல இடங்களில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.

பின்னர் CEPT பல்கலைக்கழகம், அஹமதாபாத்தில் பள்ளிப்படிப்பை முடித்து, ஆடிடெக்சரல் துறையில் பட்டம் பெற்றார்.

சுவிட்சர்லாந்தில் வேலை
படிப்புக்குப் பிறகு அம்பிகா சுவிட்சர்லாந்திற்கு இண்டர்ன்ஷிப்புக்குச் சென்றார். அங்கு பல பாரிய நிறுவனங்களிலிருந்து வேலை வாய்ப்புகளைப் பெற்றார். ஆனால் அந்த வேலைகள் அவருக்கு மனநிறைவை தரவில்லை.

சுவிட்சர்லாந்தில் இருக்கும் போது UPSC மீது உள்ள ஆர்வத்தை உணர்ந்து, அதிக சம்பள வேலையைத் துறந்து இந்தியாவிற்கு திரும்பினார். UPSC தேர்வுக்காக கடுமையாக தயாராக ஆரம்பித்தார்.

முதல் இரண்டு முயற்சிகளில் தோல்வி அடைந்தாலும், தன்னுடைய குறைகளை உணர்ந்து அதிக கவனம் செலுத்தி முயற்சி செய்தார்.

மூன்றாவது முயற்சியில் வெற்றி

2022-ல் UPSC தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 164-ஆவது இடத்தைப் பெற்று, Indian Audit and Accounts Service-ல் (IAAS) தெரிவுசெய்யப்பட்டார்.

இன்றைக்கு அம்பிகா ரைனா சமூக வலைதளங்களில் மிகவும் செயல்படுகிறார். UPSC முயற்சியில் இருக்கும் பலருக்கும் அவர் ஒரு முன்னோடியாக உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.