;
Athirady Tamil News

வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

0

வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை(23) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் அண்மையில் புதிதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக பதவியேற்றிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டிருந்தார் .

இதேவேளை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

இதன் போது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை படிப்படியாக தான் முன்னெடுப்பதாக மீனவர்கள் மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் உறுதி அளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.