20 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்: 1 மணி நேரம் தூங்கியதற்கு அலுவலகம் எடுத்த நடவடிக்கை
சீனாவில் வேலையின் போது ஒரு மணி நேரம் தூங்கியதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
வழக்கு தொடர்ந்த ஊழியர்
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வேதியியல் நிறுவனம் ஒன்றில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜாங்(Zhang) என்ற நபர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலை நேரத்தின் போது மேஜையில் தூங்கியது சிசிடிவி கேமராவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து வேலையின் போது ஒரு மணி நேரம் தூங்கியதற்காக பணி நீக்கம் செய்த தனது நிறுவனத்தை எதிர்த்து ஜாங் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு பதிலளித்த நிறுவனம் தங்களது “பூஜ்ஜிய-சகிப்புத்தன்மை” கொள்கையை ஜாங் மீறிவிட்டதாக வாதிட்டது.
வழக்கில் வெற்றி பெற்ற ஊழியர்
இந்நிலையில், வேலையின் போது ஒரு மணி நேரம் தூங்கியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஜாங் தனது முன்னாள் முதலாளியுடன் குறிப்பிடத்தக்க சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சீன நீதிமன்றம், ஜாங்கின் நீண்ட வேலை காலம் மற்றும் அவரது தூக்கத்தின் குறைந்தபட்ச தாக்கத்தை கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் முடிவு மிகவும் கடுமையானது என்று தீர்ப்பளித்தது.
மேலும் ஜாங்கிற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் சுமார் 350,000 யுவான் (சுமார் ₹40 லட்சம்) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு சீனாவில் பணிச்சூழல் விதிமுறைகள் மற்றும் ஊழியர் உரிமைகள் குறித்த அதிகரித்த கவனத்தை எடுத்துக்காட்டுகிறது.