அரச குடும்பத்தில் தொடரும் இளவரசி டயானாவின் மரபியல் சார்ந்த விடயம்: வைரல் செய்யும் ஆதரவாளர்கள்
இளவரசர் வில்லியமின் பிள்ளைகளை மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவுடன் அரச குடும்ப ஆதரவாளர்கள் ஒப்பிடுகின்றனர்.
இளவரசி டயானா
மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் முகம், உலகில் மிகவும் அடையாளம் காணக்கூடிய முகங்களில் ஒன்றாக இருந்ததால், ஸ்பென்சர் குடும்பத்தில் மரபணுக்களின் வலுவான தொகுப்பு உள்ளது என்பது இரகசியமல்ல.
1982யில் இளவரசர் வில்லியம் எப்படி சிம்மாசனத்தின் வாரிசாக வளருவார் என்று பலர் ஆச்சரியப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர் வளர வளர, அரச குடும்ப ஆதரவாளர்கள் அவரை தாயுடன் ஒப்பிடத் தொடங்கினர்.
தாய்-மகன் ஒற்றுமை
குறிப்பாக வில்லியமின் தங்கப் பொன்னிற முடி மற்றும் கூர்மையான தாடையைப் பற்றி பேசினர். இவ்வாறாக தாய்-மகன் ஒற்றுமை குறித்து பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் டயானா, வில்லியம் மற்றும் சார்லோட் மூவருக்கும் ஒரே மாதிரியான கண் வடிவம் உள்ளதாக ஆதரவாளர்கள் குறிப்பிட்டுளள்னர். அதாவது டயானாவின் மரபியல் தொடர்வதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு சான்றாக, வில்லியமின் இரண்டு பிள்ளைகளான இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் ஜார்ஜ் ஆகியோரை பாட்டி டயானாவுடன் பார்வை தொடர்பில் ஒப்பிடுகிறார்கள்.
இதுதொடர்பான கருத்துக்களில், “சார்லோட் டயானாவைப் போலவே இருக்கிறார். அவர் தனது பாட்டியை பின்தொடர்வது அற்புதம். குட்டி இளவரசி தனது பாட்டியைப் போல் எப்போதும் அழகாக இருக்கிறார்” கூறப்பட்டுள்ளன.