திருமணம் செய்வதற்கு முன்னரான உளவள ஆலோசனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
திருமணம் செய்வதற்கு முன்னரான உளவள ஆலோசனையின் அவசியம் தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(25.11.2024) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
இச் செயலமர்வில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி மற்றும் வளவாளர்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உளவளப் பிரிவின் வைத்திய கலாநிதி எஸ். சஜாத், தேவை நாடும் மகளிர் நிறுவனத்தின் (WIN) சட்ட உத்தியோகத்தர் செல்வி சி. இந்துகா மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உளவள ஆலோசகர் என்.நவராஜ் கலந்துகொண்டார்கள்.
இச் செயலமர்வில் பங்குபற்றாளர்களாக யாழ்ப்பாண மாவட்ட திருமணப் பதிவாளர்கள், சிரேஷ்ட மேற்பார்வை குடும்ப நல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் என 90 பேர் கலந்து கொண்டார்கள்.