ஜேர்மனியில் இருந்து புறப்பட்ட DHL சரக்கு விமானம் விபத்து., ரஷ்யாவின் நாசவேலையா?
லிதுவேனியாவின் வில்நியஸ் சர்வதேச விமான நிலையம் அருகே DHL சரக்கு விமானம் வீடு மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த அவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் இருந்து லிதுவேனியாவிற்குப் பயணித்த போயிங் 737 விமானம், வில்நியஸ் விமான நிலையத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் விபத்தில் சிக்கியது.
விபத்து நேரத்தில் விமானத்தில் நால்வர் இருந்ததாக DHL தெரிவித்தது.
விமானம் சீராக இறங்கும் போதே, காணாமல் போன இடத்தில் தீப்பந்தமாக வெடித்ததாக கண்காணிப்பு வீடியோவில் தெரிய வந்தது.
விபத்தால் வீடு சிறிது சேதமடைந்தது. இருப்பினும், வீட்டில் இருந்த 12 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
வில்நியஸ் மேயர் வால்டாஸ் பென்குஸ்காஸ், இந்த விபத்து மிகப்பாரிய ஆபத்திலிருந்து தப்பியது எனக் கூறினார்.
“300 மீட்டர் தொலைவில் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதி மற்றும் தொழில்துறை மையம் உள்ளன. அதனால், இது அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் நாசவேலையா?
லிதுவேனிய காவல்துறை விபத்துக்கான காரணம் பற்றி விசாரிப்பதோடு, பயங்கரவாத செயல்களுக்கான சாத்தியத்தையும் மறுக்கவில்லை.
ஏனெனில், ஓரிரு தினங்களாக வெளிவரும், பிரித்தானியாவின் அணு ஆயுத தளங்கள் மீது பறந்த மர்ம ட்ரோன்கள் குறித்த செய்தி, ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த மர்ம ட்ரோன் குறித்த செய்திகளால், இந்த சரக்கு விமான விபத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.
இது ரஷ்யாவின் ரகசிய நாசவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித பிழை காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேயர், உண்மையை அறிய ஆராய்ச்சி அவசியம் என தெரிவித்தார். “பீதி அடையாமல் நம்பகமான தகவல்களை மட்டுமே அனுசரிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.