;
Athirady Tamil News

எம்பி அருச்சுனாவுக்கு அடுத்த சிக்கல் ; பிடியாணை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

0

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு, பேஸ்லைன் வீதியில் வீதி விபத்தொன்றை ஏற்படுத்தியதுடன், மற்றுமொரு வாகன சாரதியை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் , இன்றைய தினம்(26) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது அருச்சுனா மன்றில் முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்ற் பிடியாணை பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.