;
Athirady Tamil News

பிரித்தானியாவில் உள்ள தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0

பிரித்தானியா – லண்டனில்(London) சுரங்க தொடருந்து பாதைகளில் பெரும்பாலான பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெர்ட் புயல் காரணமாக தொடரும் மழையினாலும் வெள்ளத்தினாலும் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எலிசபெத் லைன்(Elizabeth line) தொடருந்து சேவையில், பேடிங்டன்க்கும்(Paddington) அபே வூட்க்கும்(Abbey Wood) இடையில் சிக்னல் பழுதுபட்டுள்ளதால், தொடருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு விடுக்கபட்ட அறிவுறுத்தல்

அத்துடன், Bakerloo, District, Piccadilly மற்றும் Northern lines ஆகியவற்றுடன், London Overground சேவையிலும் கடுமையான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, Great Western Railway, Transport for Wales முதலான சேவைகள் வானிலை காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், Exeter St Davids மற்றும் Okehamptonக்கு இடையிலான பாதையும், Northamptonஇல் உள்ள தொடருந்து பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, தொடருந்துகளில் பயணிக்கும் மக்கள், தங்கள் தொடருந்து சேவை குறித்து முன்கூட்டியே உறுதிபடுத்திய பின் பயணத்தை திட்டமிடுவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.