ரஷ்யாவிடம் சிக்கிய பிரித்தானிய உளவாளி!
பிரித்தானிய(Uk) தூதரக அதிகாரி ஒருவரை உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷ்யா வெளியேற்றுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரை மற்றும் ரஷ்யா இடையோன போர் பதற்றம் 1000 நாட்களை கடந்து செல்கின்ற நிலையில், உளவுப்பணியில் ஈடுபட்டதாக கூறி பிரித்தானிய தூதர் எட்வர்ட் பிரையர் வில்க்ஸை (Edward Pryor Wilkes) ரஷ்ய அதிகாரிகள் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
ரஷ்யாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான FSB FSS வில்க்ஸ் அவரது நுழைவு விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்து ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு
அத்துடன், அவர் பிரித்தானிய உளவுத்துறை முகவராக தூதரக அங்கீகாரத்தின் கீழ் செயல்பட்டதாகவும், ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா, வில்க்ஸின் தூதரக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.
மேலும், அவருக்கு இரண்டு வாரங்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.