ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில்(Japan) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கம் ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் நேற்று முன் தினம் (26) பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கமானது 6.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்
இதேவேளை, நிலநடுக்கத்தால் மக்கள் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும், கடந்த ஜனவரி மாதம் குறித்த பிராந்தியத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.