;
Athirady Tamil News

உக்ரைனுக்கு வான்வழி பாதுகாப்பு அமைப்பை அனுப்பும் ஜேர்மனி

0

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக IRIS-T ரக வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை ஜேர்மனி அனுப்புகிறது.

ஜேர்மனி, உக்ரைனுக்கு இரண்டு medium-range SLM மற்றும் short-range SLS ஆகிய IRIS-T வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை இவ்வாண்டின் இறுதிக்குள் அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜேர்மன் அரசாங்கத்தின் உக்ரைன் நிலைமையைக் கண்காணிக்கும் மையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் கிறிஸ்டியன் ஃப்ராய்டிங், இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

ஜேர்மனியின் மேலும் சில வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் வருகிற நாட்களிலும் வாரங்களிலும், சில தாக்குதல் டிரோன்களுடன் சேர்ந்து, உக்ரைனுக்கு அனுப்பப்பட உள்ளன.

ஜேர்மன் சேன்சலர் ஒலஃப் ஷோல்ஸ், உக்ரைனுக்கு மொத்தம் 17 IRIS-T பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமென செப்டம்பரில் அறிவித்தார்.

IRIS-T ஒரு மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பாகும். இது விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் மற்றும் க்ரூயிஸ் ஏவுகணைகளை எதிர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

IRIS-T மூலம் இதுவரை 250-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் க்ரூயிஸ் ஏவுகணைகளை தடுத்துள்ளதாக ஜேர்மன் சேன்சலர் தெரிவித்தார். மேலும், இந்த பாதுகாப்பு அமைப்பின் துல்லியமான தாக்குதல்களின் வெற்றி விகிதம் 95% என்று கூறப்படுகிறது.

ஜேர்மனி, உக்ரைனுக்கு 28 பில்லியன் யூரோ மதிப்பிலான உதவிகளை வழங்கி வருகிறது, இதில் ஆயுதங்கள், பயிற்சி, மருத்துவ உதவிகளும் அடங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.