காஸாவின் மக்கள்தொகையை பாதியாக குறைக்க வேண்டும்… இஸ்ரேல் அமைச்சர் சர்ச்சை கருத்து
காஸாவில் பாலஸ்தீன மக்களை வெளியேற்றி இஸ்ரேலியர்கள் குடியேற வேண்டும் என அந்த நாட்டின் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு அரிய வாய்ப்பு
காஸா பகுதியை மொத்தமாக வெற்றி கொள்ள வேண்டும் என்றும், அந்த வார்த்தைக்கு நாம் பயப்படக்கூடாது என்றும் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை பிற்பகல் யேஷா கவுன்சில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் விவாத கருத்துகளை முன்வைத்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் நிலையில்,
காஸா பகுதியை மொத்தமாக வெற்றி கொள்ள வேண்டும் என்றும், ஒரு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் இரண்டு ஆண்டுகளில், காஸாவின் மக்கள் தொகை பாதியாகக் குறையும் என்றார்.
இஸ்ரேலில் தீவிர தேசியவாத மத சியோனிசம் கட்சியை வழிநடத்தும் ஸ்மோட்ரிச், சமீப மாதங்களில் தனது கருத்துகளால் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த ஆகஸ்டு மாதம், பாலஸ்தீனியப் பிரதேசத்தில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க இரண்டு மில்லியன் காஸா மக்கள் பட்டினி கிடப்பது நியாயமானது என்ற அவரது கருத்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மட்டுமின்றி, நவம்பர் 14ம் திகதி, மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில், காஸா மக்களை கூட்டமாக வெளியேற்றும் இஸ்ரேலின் நடவடிக்கை என்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல் என சாடியிருந்தது.
பொறுப்பற்ற கருத்து
ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் நிராகரித்ததுடன், பொய்யான தகவல் என்றும் விளக்கமளித்தது. இஸ்ரேலின் நடவடிக்கள் என்பது இன அழிப்புக்கு ஒப்பாகும் என்றே மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
காஸாவில் குடியிருக்கும் 2.4 மில்லியன் மக்களை கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என்றே பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் இன்னொரு தீவிர வலதுசாரி அமைச்சரான Itamar Ben Gvir ஆகியோர் வலியுறுத்துகின்றனர்.
ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்ட இந்த கருத்தை அமெரிக்கா உடனடியாக புறந்தள்ளியதுடன், பொறுப்பற்ற கருத்து என்றும் விமர்சித்துள்ளது. 1967ல் காஸா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து 2005 வரை அங்கு படைகளையும் இஸ்ரேலிய மக்கள் குடியேறுவதையும் ஊக்குவித்தது.
ஆனால் அங்கிருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறியிருந்தாலும், காஸா பிரதேசத்தின் மீது முட்டுக்கட்டையை விதித்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2007ல் பாலஸ்தீனிய அதிகாரத்தின் விசுவாசிகளை வெளியேற்றிய பின்னர் ஹமாஸ் படைகள் காஸாவில் மொத்த அதிகாரத்தையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.