யாழில் மழை, வெள்ளத்தால் 2,634 குடும்பங்கள் – 9,404 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2,634 குடும்பங்களை சேர்ந்த 9,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 416 குடும்பங்களைச் சேர்ந்த 1355 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.
ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 371 குடும்பங்களை சேர்ந்த 1462 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 115 குடும்பங்களை சேர்ந்த 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி, மின்னல் தாக்கத்தால் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 29 குடும்பங்களை சேர்ந்த 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 573 குடும்பங்களை சேர்ந்த 2,335 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாகவும், ஒரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 141 குடும்பங்களை சேர்ந்த 508 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 266 குடும்பங்களை சேர்ந்த 932 பேர் பல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களை சேர்ந்த 294 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 470 குடும்பங்களை சேர்ந்த 1,520 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.