நாடாளுமன்ற வாவிக்குள் பாய்ந்த எம்.பியின் கார்
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் நேற்று (26) மாலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
எனினும் விபத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவை மீண்டும் ஏற்றிச் செல்ல சாரதி வந்தபோதே கார் தடாகத்திற்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.