;
Athirady Tamil News

ஜேர்மனிக்கு ஆண்டொன்றிற்கு 288,000 வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை

0

ஜேர்மனி சமீபத்தில் புலம்பெயர் பணியாளர்கள் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்தாலும், அதன் பணியாளர்கள் பற்றாக்குறை தீர்ந்தபாடில்லை.

அந்த பணியாளர்கள் பற்றாக்குறையை புலம்பெயர்ந்தோரை வைத்துத்தான் நிரப்பவேண்டும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!

ஜேர்மனிக்கு 288,000 வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை
Bertelsmann Foundation என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்று, 2040ஆம் ஆண்டு வரையில், ஜேர்மனிக்கு ஆண்டொன்றிற்கு 288,000 வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை என்று கூறியுள்ளது.

ஆண்டொன்றிற்கு 288,000 திறன்மிகுப் பணியாளர்கள் இல்லையென்றால், ஜேர்மனியின் பணியாளர்கள் எண்ணிக்கை, தற்போது 46.4 மில்லியனாக இருப்பது, 2040வாக்கில் 41.9 மில்லியனாகவும், 2060வாக்கில் 35.1 மில்லியனாகவும் குறைந்துவிடும் என்கிறது அந்த ஆய்வு.

மற்றொரு ஆய்வு, 2040 வரை ஜேர்மனிக்கு ஆண்டொன்றிற்கு 368,000 புலம்பெயர் பணியாளர்கள் தேவை என்றும், அதற்குப் பிறகு, 2060 வரை ஆண்டொன்றிற்கு 270,000 புலம்பெயர் பணியாளர்கள் தேவை என்றும் கூறுகிறது.

விடயம் என்னவென்றால், புலம்பெயர் பணியாளர்கள் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்தாலும், ஜேர்மன் பணித்தலங்களில் பாரபட்சம் நிலவுவதாகவும், புலம்பெயர்ந்தோருக்கு ஜேர்மானியர்களுக்கு இணையாக வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் கூறுகிறார்கள்.

ஆக, இந்த குறைபாடுகள் எல்லாம் நீங்கினால்தான் ஜேர்மனியின் பணியாளர் பற்றாக்குறை நீங்கும். ஜேர்மனி தனது பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க, புலம்பெயர்தல் விடயத்தில் புலம்பெயர்ந்தோரைக் கவரும் வகையில் மேலும் பல நேர்மறையான மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.