பிரான்ஸ் நாட்டவரான ஊடகவியலாளரைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு
பிரான்ஸ் நாட்டவரான ஊடகவியலாளரைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளரைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு
பிரான்ஸ் ஊடகவியலாளரான கேத்தரின் நோரிஸ் என்பவர் சட்டவிரோதமாக மேற்கு Kursk பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, அவரைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேத்தரின், France24 செய்தி சேனலைச் சேர்ந்த ஊடகவியலாளராவார்.
செவாயன்று செய்தி சேகரிப்பதற்காக, கேத்தரின் உக்ரைன் ராணுவத்தினருடன் Kursk பகுதிக்குள் நுழைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆகத்து மாதம் 6ஆம் திகதி, உக்ரைன் படைகள் Kursk பகுதிக்குள் நுழைந்ததிலிருந்தே, அப்பகுதியில் செய்தி சேகரிக்கச் செல்லும் மேற்கத்திய நாடுகளின் ஊடகவியலாளர்கள் பலர் மீது ரஷ்யா குற்றவியல் வழக்குகள் தொடர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.