யாழில்.இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா
யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கி உள்ள மக்களை யாழ் . மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா பார்வையிட்டார்.
யாழ் மாவட்டத்தில் காணப்படும் 68 இடத்தங்கல் முகாம்களிலும் இடைத்தங்கல் முகாங்களை அகற்றும் வரை வைத்திய சேவைகள் யாழ் போதனா வைத்தியசாலையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனை இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்த யாழ் . மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா முகாமில் தங்கியுள்ள மக்களுடனும் கலந்துரையாடினார்.
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.