வவுனியாவில் 21 வயது இளைஞன் சடலமாக மீட்பு
வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்ற போது கால் தவறி குளத்திற்குள் இளைஞன் விழுந்துள்ளார்.
இதனையடுத்து, ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கி தேடுதலில் ஈடுபட்டபோதும் மூன்றுநாட்களாக இளைஞன் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் குளத்தில் இருந்து இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது.