பிரான்ஸ் அரசு சில நாட்களுக்குள் கவிழக்கூடும்: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்
புதிய அரசு கவிழவேண்டும் என 50 சதவிகித பிரான்ஸ் மக்கள் விரும்புவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பிரான்ஸ் அரசு சில நாட்களுக்குள் கவிழக்கூடும்
பிரான்சில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்போ, அல்லது அடுத்த வாரத்திலோ கூட கவிழலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Ifop என்னும் ஆய்வமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், 53 சதவிகித பிரெஞ்சு மக்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மிஷெல் பார்னியேர் அரசு கவிழவேண்டும் என விரும்புவது தெரியவந்துள்ளது.
பிரதமர் முன்வைத்துள்ள பட்ஜெட் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவர்கள் இந்த கருத்தை முன்வைத்துள்ளதாக தெரிகிறது.
50 சதவிகித மக்கள் விருப்பம்
பற்றாக்குறையை சரி செய்ய 60 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு வரிகளும், சலுகை குறைப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளதால், 67 சதவிகிதம் பேர் பார்னியேரின் பட்ஜெட்டை எதிர்ப்பதாகவும், 33 சதவிகிதம் பேர் மட்டுமே பிரதமரின் முடிவை ஆதரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வலதுசாரியினரும், இடதுசாரியினரும் பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், அவர் அதில் தோல்வியடையக்கூடும் என்றும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்போ, அல்லது அடுத்த வாரத்திலோ கூட அரசு கவிழலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் பலர் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆய்வு, நேற்றும், நேற்று முன்தினமும், அதாவது, நவம்பர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.