;
Athirady Tamil News

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழில் விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சின் செயலர் சம்பத் துயகொந்த

0

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழில் விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் சம்பத் துயகொந்த தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் சரியான மதிப்பீட்டை செய்வோம் . ,அது குறித்து முடிவு செய்வோம் .

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்க காலத்தில் நாங்கள் மீண்டும் காணி விடுவிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம் . நிச்சயமாக நேர்மறையாக இந்த விடயத்தில் ஈடுபடுவோம்.

ஏற்கனவே சில வீதிகளை நாம் விடுவித்துள்ளோம். அத்துடன் இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்பொழுதும் கரிசனை உடையவர்களாகவே உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.