500க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்களின் உடல்கள்: திருப்பிய அனுப்பிய ரஷ்யா
போரில் கொல்லப்பட்ட 500க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்களின் உடல்களை ரஷ்யா திருப்பி அனுப்பியதாக கீவ் தெரிவித்துள்ளது.
500க்கும் மேற்பட்ட உடல்கள்
உக்ரைன், ரஷ்யா போரில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இருதரப்பில் இருந்தும், முதல் மாதத்தில் இருந்து உடல்கள் மற்றும் போர்க் கைதிகள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
அந்த வகையில் தற்போது மீண்டும் 500க்கும் மேற்பட்ட வீரர்களின் உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் உக்ரைன் வீரர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இறந்தவர்கள் என்றும் கீவ் கூறியுள்ளது.
டொனெட்ஸ்க் பகுதியில் இருந்து
இதுகுறித்து போர்க் கைதிகளின் சிகிச்சைக்கான கீவ்வின் ஒருங்கிணைப்பு தலைமையகம் கூறுகையில், “மீண்டும் திரும்பும் நடவடிக்கைகளின் விளைவாக, கொல்லப்பட்ட 502 பாதுகாவலர்கள் உடல்கள் உக்ரைன் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. 397 உடல்கள் சண்டை மிகுந்த டொனெட்ஸ்க் பகுதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து 24 பேரும், the southern Zaporizhzhia பகுதியில் இருந்து 64 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 17 பேர் ரஷ்ய பிரதேசத்தில் உள்ள பிணவறைகளில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் உடல்கள் தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், நிபுணத்துவ நிறுவனங்களுடன் சேர்ந்து இறந்தவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் மையம் தெரிவித்துள்ளது.
எனினும், ரஷ்யா அதன் பங்கிற்கு அவர்களின் வீரர்களின் உடல்களை திரும்பப் பெறுவதை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.