பேரிடரை சந்தித்த மலேசியா! 80,000 பேர் வெளியேற்றம்..பலி எண்ணிக்கை உயர்வு
மலேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 4 பேர் உயிரிழந்தனர்.
மோசமான பாதிப்பு
இந்த வாரம் பெய்த கனமழையால் மலேசியாவின் பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வடகிழக்கு Kelantan மற்றும் Terengganu பகுதிகள் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 7 மாநிலங்களில் 80,589 குடியிருப்பாளர்கள் 467 தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக தேசிய பேரிடர் மையம் கூறியுள்ளது.
பலி எண்ணிக்கை
இதற்கிடையில், Kelantanயில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஒரு தேடல் மற்றும் மீட்புக்குழு ஒன்று திரட்டப்பட்டுள்ளது என்று பேரிடர் மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.