உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு… வாயைப்பிளக்க வைக்கும் அதன் மதிப்பு
மத்திய சீனாவில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்றை கண்டுபிடித்துள்ள நிலையில், அதில் மொத்தம் 1,000 மெட்ரிக் டன் உயர்தர தாது இருப்பதாக நம்பப்படுகிறது.
இதுவே மிகப்பெரிய சுரங்கம்
பிங்ஜியாங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கம் தொடர்பில் ஹுனான் மாகாணத்தின் புவியியல் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு 600 பில்லியன் யுவான் என சீன அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்திய மதிப்பில் சுமார் ரூ 7 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கச் சுரங்கங்களில் இதுவே மிகப்பெரிய சுரங்கம் என்றும் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் South Deep சுரங்கத்தில் 930 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே மிகப்பெரிய சுரங்கம் என அறியப்பட்டு வந்த நிலையில், தற்போது சீனா அதை முறியடித்துள்ளது.
தங்கம் புதைந்திருக்கும்
முதற்கட்ட ஆய்வுகளில் 2 கிலோமீற்றர் ஆழத்தில் சுமார் 300 மெட்ரிக் டன் தங்கம் 40 தங்க விரிசல்களில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 3 கிலோமீற்றர் ஆழத்தில் மேலும் அதிகமாக தங்கம் புதைந்திருக்கும் வாய்ப்பும் உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு சீனாவின் தங்க வணிகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. அத்துடன் நாட்டின் சுரங்கம் மற்றும் பொருளாதார வலிமையையும் மேம்படுத்தும் என கூறுகின்றனர்.
மேலும், 2,000 மீற்றர் வரம்பில் உள்ள ஒரு டன் தாதுவில் அதிகபட்சமாக 138 கிராம் அளவுக்கு தங்கம் பிரித்தெடுக்கலாம் என்றே அதிகாரிகள் கூறுகின்றர்.