போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் ஹிஸ்புல்லாவின் அதிரடி அறிவிப்பு!
இஸ்ரேலுடன்(Israel) ஒப்புக் கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு லெபனான் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தயாராகவுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தினை ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஷீம் காசீம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் லெபனானின் தற்காப்புத் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே கடந்த புதன்கிழமை(27) போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து 48 மணி நேரம் கடக்காத நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் இரு தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதனால் அங்கு மீண்டும் போர் வெடிக்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.