;
Athirady Tamil News

தனித்தனியாகவே வாழ்கிறார்கள்… மேகன் – ஹரி தம்பதி குறித்து வெளியாகும் புதிய தகவல்

0

இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும் அமெரிக்காவில் தனித்தனியாகவே வாழ்ந்து வருவதாக ஆவணப்பட இயக்குநர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

தனித்தனியாக வாழ்வதாக

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், பிரித்தானிய அரச குடும்பத்தின் அரவணைப்புகளில் இருந்து விலகி,

தங்கள் வாழ்க்கையை முன்னெடுக்கும் ஹரி – மேகன் தம்பதி தொடர்பில் ஆவணப்படம் ஒன்று அடுத்த மாதம் ஜேர்மனியில் வெளியிடப்பட உள்ளது.

விருதுகள் வென்ற திரைப்பட இயக்குநர் உல்ரிக் க்ரூன்வால்ட், கலிஃபோர்னியா நகரமான மான்டெசிட்டோவுக்குச் சென்று ஹரி – மேகன் தம்பதியின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். அவரே தற்போது ஹரி – மேகன் தம்பதி தங்களின் வழ்க்கையை தனித்தனியாக வாழ்வதாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஹரியும் மேகனும் தாங்கள் விரும்பிய அந்த உயர்வான வாழ்க்கையை முழுமையாக இன்னும் வாழவில்லை என்றே க்ரூன்வால்ட் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் மிக நெருக்கமான வட்டத்தில் தான் சந்திப்புகளும் விவாதங்களும் நடக்கும். ஆனால் இந்த கூடுகைகளில் ஹரியும் மேகனும் மிக அரிதாகவே கலந்துகொள்கிறார்கள்.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை கலிபோர்னியாவில் தற்போது வழ்கிறார்கள் என்கிறார் க்ரூன்வால்ட். இதே கருத்தையே இவர்களின் அண்டை வீட்டரில் ஒருவரும் குறிப்பிட்டுள்ளார்.

வலுவான திட்டமிடலுடன்

ஹரி – மேகன் தம்பதியை நகரத்தில் சந்திப்பதே அரிதாக உள்ளது என தெரிவித்துள்ளார். அருமையான வாய்ப்புகளை இருவரும் தனித்தனியாக தவற விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் வெளியாகவிருக்கும் அந்த ஆவணப்படமானது அரச குடும்பத்தின் கடமைகளில் இருந்து விலகியதிலிருந்து ஹரி – மேகன் தம்பதி சுதந்திரம் மற்றும் நிதி சுதந்திரத்தை அடைந்தார்களா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

ஹரியும் மேகனும் தொடக்கத்தில் வலுவான திட்டமிடலுடன் செயல்பட்டார்கள் என்றும், ஆனால் தற்போது பெரும்பாலும் அவர்கள் தனித்தனியாக இயங்கவே விரும்புகிறார்கள் என்றும் க்ரூன்வால்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஹரி -மேகன் தம்பதி தனித்தனி தொழில் முயற்சிகளை முன்னெடுக்கும் பொருட்டு இயங்கி வருவதாக கடந்த வாரம் பல தகவல்கள் வெளியாகின. தொழில் ரீதியான பிரிவு இதுவென நிபுணர்கள் அடையாளப்படுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.