;
Athirady Tamil News

தமிழ் பாரம்பரிய மாதம்! அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்

0

அவுஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க கோரி அவுஸ்திரேலியா எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன், சூரியன், நிலம், மழை, விவசாயம் போன்றவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி மாதம் நான்கு நாட்கள் அறுவடை திருநாளாக பொங்கல் விழா தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

எனவே ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க வேண்டும். 5000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் இதுவாகும், தமிழர்களின் நெறிமுறைகள், மனித விழுமியங்களின் மதிப்பு குறித்து மக்கள் சிந்திக்க தூண்டும், திருக்குறள் போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களையும் அங்கீரிக்க உதவும்.

மேலும் உள்ளூர் வர்த்தகர்களுக்கும் பயனளிக்கும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.