;
Athirady Tamil News

தென் கொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்த சீன – ரஷ்ய இராணுவ விமானங்கள்

0

தென் கொரியாவின் (South Korea) வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஐந்து சீன (China) இராணுவ விமானங்களும், ஆறு ரஷ்ய (Russia) இராணுவ விமானங்களும் நுழைந்ததாக தென் கொரியா இராணுவம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது.

இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இராணுவ விமானங்கள்
கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.

முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.