;
Athirady Tamil News

டொனால்ட் ட்ரம்பின் வலைத்தள பதிவால் பரபரப்பு

0

அமெரிக்காவை (us)அழிக்க கடுமையாக போராடிய இடதுசாரி பைத்தியங்களுக்கு நன்றி என்று அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப்(donald trump), தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அமெரிக்காவை அழிக்க இடதுசாரி பைத்தியக்காரர்கள் கடுமையாக உழைத்தனர். அவர்களுக்கு எனது நன்றி. நீங்கள் பரிதாபமாக தோல்வி அடைந்து விட்டீர்கள். எப்போதும் நீங்கள் தோல்வி மட்டுமே அடைவீர்கள்.

மக்கள் மீண்டும் அளித்த வாய்ப்பு
அவர்களின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் மிகவும் மோசமாக இருந்ததால், அமெரிக்காவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல மக்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

கவலைப்பட வேண்டாம். அமெரிக்கா விரைவில் மதிக்கப்படும் ஒரு நாடாக மாறும். நியாயமாகவும், வலுவானதாகவும் மாறும். நீங்கள் அமெரிக்கர்களாக இருப்பதை நினைத்து பெருமைப்படுவீர்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.