உணவிற்காக முதலை எடுத்த பயங்கர ரிஸ்க்… புல்லரிக்க வைக்கும் காட்சி
முதலை ஒன்று மீனை உணவாக்க படும் முயற்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
தண்ணீரில் வாழும் விலங்குகளில் ஒன்றாக இருக்கும் முதலை சில தருணங்களில் மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
தனது பார்வைக்கு சிக்கும் விலங்குகளை எளிதில் வேட்டையாடி சாப்பிடும் முதலைகள், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை.
ஆம் மனிதர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவித்த சம்பவங்கள் பலவற்றினை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இங்கு சில நபர்கள் அவ்வாறான முதலையிடம் தனது வேலையை காட்டியுள்ளனர். அதாவது கயிறு ஒன்றில் மீனை கட்டி தொங்கவிட்டு அதனை சாப்பிடுவதற்கு முதலையிடம் கொடுத்துள்ளனர்.
ஆனால் முழுவதுமாக கொடுக்காமல் முதலையை மிகவும் கஷ்டப்பட்டு கிடைப்பது போன்று செய்துள்ளனர். முதலையும் தனக்கு மீன் தான் முக்கியம் என்ற பாணியில் பயங்கர ரிஸ்க் எடுத்துள்ள காட்சியே இதுவாகும்.