வயநாட்டில் பிரியங்கா: ‘ராகுல் காந்தி மீதான மக்களின் அன்பு தேர்தலில் எதிரொலித்தது!’
வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரியில் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று(டிச. 1) பொதுமக்களை சந்தித்து பேசினார்.
சுல்தான் பத்தேரியில் அவர் பேசியதாவது, “எனக்கு நீங்கள் அளித்து வரும் அன்புக்கும், அதன்பால் என்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தமைக்கும் நன்றி. எனது சகோதரர் ராகுல் காந்திக்கும் நன்றி. அவர் ஆற்றிய பணிகளுக்காகவும், உங்கள் அனைவருடனும் அவர் உருவாக்கி வைத்துள்ள பிணைப்புக்காகவும் நன்றி தெரிவிக்கிறேன்.
நீங்கள் அளித்து வரும் இந்த பேராதரவு, அவர் மீதான உங்கள் அன்பின் வெளிப்பாடே…
நாம் அனைவரும் இன்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நமது ஜனநாயகத்தை வேரறுக்கத் துடிக்கும் ஒரு சக்திக்கு எதிராக நாம் போராடி வருகிறோம்” என்றார்.