காசாவில் உணவு வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய WCK: இஸ்ரேல் குற்றச்சாட்டு
காசாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக தொண்டு நிறுவனமான உலக மத்திய சமையலறை அறிவித்துள்ளது.
செயல்பாட்டை நிறுத்திய உலக மத்திய சமையலறை
காசா மீது இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 3 ஊழியர்கள் உயிரிழந்ததை அடுத்து தொண்டு நிறுவனமான உலக மத்திய சமையலறை தங்கள் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக மத்திய சமையலறை வழங்கிய தகவலில், ஊழியர்கள் பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற மோசமான செய்தியை பகிர்வதில் வருத்தமடைகிறோம் என தெரிவித்துள்ளது.
மேலும் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உலக மத்திய சமையலறை ஊழியர்கள் கொல்லப்பட்டு இருப்பதால் தற்காலிகமாக காசாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் குற்றச்சாட்டு
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்த தகவலில், கொல்லப்பட்ட 3 ஊழியர்களில் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உதவியவர் என்று குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உலக மத்திய சமையலறை, வாகனத்தில் இருந்த எந்தவொரு நபரும் அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுடன் தொடர்பு வைத்து இருந்தாரா என்பது உலக மத்திய சமையலறைக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளது.