ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவருடன் உணவருந்திய ட்ரூடோ
அமெரிக்காவின் புளோரிடாவில் டொனால்டு ட்ரம்பை சந்தித்த புகைப்படத்தை ட்ரூடோ பகிர்ந்துள்ளார்.
கடுமையான வரி
அடுத்த மாதம் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள நிலையில், கனடா உட்பட மூன்று நாடுகள் மீது கடுமையான வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவுக்கு விரைந்து ட்ரம்ப்பினை சந்திப்பதாக தகவல் வெளியானது.
புகைப்படத்தை பகிர்ந்த ட்ரூடோ
இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவரது பதிவில், “நேற்று இரவு ஜனாதிபதி ட்ரம்பின் இரவு உணவிற்கு நன்றி. நாங்கள் மீண்டும் இணைந்து செய்யக்கூடிய வேலையை எதிர்நோக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.