ஒன்றாறியோவில் பனிப்புயல் தாக்கம்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பனிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் ஒரு மீட்டர் அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பனிப்புயல் காரணமாக சுமார் 30,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதிகளில் பயணம் செய்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் சில பகுதிகளில் பெருமளவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
பனிப்பொழிவினை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாகன போக்குவரத்து மேற்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.