ரஷ்யாவின் 2025 பட்ஜெட்: பாதுகாப்பு செலவினத்திற்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
ரஷ்யாவின் 2025 பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினத்திற்காக கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.
உக்ரைனுடன் நீடித்துவரும் போரில் வெற்றி பெறுவதை உறுதிபடுத்த, ரஷ்ய அரசு 2025 ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினத்தை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
ரஷ்ய அரசின் புதிய திட்டத்தின் அடிப்படையில், மொத்த பட்ஜெட்டில் 33 சதவீதத்தை, அதாவது மூன்றில் ஒரு பங்கை நாட்டின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 3.5 டிரில்லியன் ரூபிள் ( இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.9,54,975 கோடி) ஆகும். இது முந்தைய பாதுகாப்பு செலவினத்தை விட 28.3% உயர்வாகும்.
ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கூட்டமைப்பு கவுன்சில் மற்றும் மாநில டூமா ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பாரிய போர்
பிப்ரவரி 2022-இல் தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பாரிய மோதலாகும், மேலும் இது இரு தரப்பினரின் வளங்களையும் அழித்துவருகிறது.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் தனது பாதுகாப்பை வலுப்படுத்தி வரும் நிலையில், ரஷ்ய படைகள் பலமான மற்றும் சிறந்த சாதனங்களுடன் நிலப்பரப்பில் முன்னேற்றம் காண்கின்றன.