;
Athirady Tamil News

கனடாவில் புதிய உச்சத்தை அடைந்த மாட்டிறைச்சி விலை., உணவுப்பழக்கம் மாறும் நிலை

0

கனடாவில் மாட்டிறைச்சியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இதனால் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. மக்கள் மாற்று உணவை தேடும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

2020-ஆம் ஆண்டில் 10 டொலராக இருந்த ஒரு கிலோ மாட்டிறைச்சி (Ground Beef) இப்போது சராசரியாக 13 டொலராக உள்ளது.

Statistics Canada-வின் கூற்றுப்படி, இப்போது ஒரு சர்லோயின் ஸ்டீக் சராசரியாக 22 டொலர் ஆகும். அனால் இது 2016-இல் 16 டொலருக்கு கீழ் இருந்தது.

விலை உயர்வுக்கான காரணங்கள்

வறட்சி காரணமாக புல் விலை அதிகரித்து, மாட்டுவளர்ப்பு தொழில் பாரிய பாதிப்பை சந்தித்துள்ளது.

அதிக செலவுடைய மாடுகளை விற்க சிலர் முடிவெடுத்தனர். சிலர் மாட்டுவளர்ப்பு தொழிலை விட்டு வெளியேற தொடங்கிவிட்டனர்.

கால்நடைகளிடையே காய்ச்சல் போன்ற தாக்கங்களும் இதற்குக் காரணமாகின்றன.

மாற்று தொழில் நோக்கங்கள்: விலை உயர்வால் சில பசு வளர்ப்பாளர்கள் மாடுகளை விற்க முடிவு செய்தனர்.

சந்தையின் தாக்கம்
மாட்டிறைச்சி விலை உயர்வால் மற்ற உணவுப்பொருட்களுக்கு பொதுமக்கள் மாறும் நிலை உருவாகும் என்று பொருட்கள் விநியோக நிபுணர் சில்வேன் சார்லெபோயிஸ் தெரிவிக்கிறார்.

குறிப்பாக, வான்கோழி மற்றும் வேறு மாற்று புரத உணவுகளுக்கு அதிக ஆவல் உருவாக வாய்ப்புள்ளது.

சந்தையில் மீண்டும் முதலீடு செய்ய பசு வளர்ப்பாளர்கள் முன்வரவில்லை என்றால், மாட்டிறைச்சி விலை தொடர்ந்து உயர்வதை எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலை மாட்டிறைச்சி சந்தையின் போக்கை மட்டுமல்ல, பொதுமக்களின் உணவு பழக்கவழக்கத்தையும் மாறச்செய்யும் என்று கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.