ஆம்புலன்ஸில் உறவினரை கொண்டுசென்ற குடும்பம்: நடந்து சென்றவர் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்த பரிதாபம்
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனிஷ் ஷா (18) என்ற நபர் ஆந்திராவின் கர்னூலில் இருந்து சொந்த ஊரான பீகாருக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட அவருடன் உறவினர்களான பிரதிமா ஷா (35), பிரின்ஸ் ஷா, முகேஷ் ஷா (36), சுனில் ஷா (40) மற்றும் ஓட்டுனர்கள் உட்பட 8 பேர் பயணித்துள்ளனர்.
அவர்கள் பயணித்த ஆம்புலன்ஸ் மத்திய பிரதேசத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நடந்து சென்ற நபர் ஒருவர் மீது மோதியதில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் பிரதிமா ஷா உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.