உடல் முழுவதும் சில்வர் பெயின்ட் – குழந்தையை வைத்து பிச்சை எடுத்த கொடூரம்!
சில்வர் பெயின்ட் பூசப்பட்ட குழந்தையின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சில்வர் பெயின்ட்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் நவம்பர் 22 ஆம் தேதி ரசாயனம் கலந்த சில்வர் பெயின்ட்டை 4 வயதுடைய சிறுவரின் தனது உடலில் பூசிக்கொண்டு சாலை ஓரத்தில் அமர்ந்து பிச்சையெடுத்துள்ளார்.
அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இதற்குக் கண்டனங்கள் எழுந்தது. இந்த வீடியோ காவல்துறையினர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வீடியோ
இந்த சம்பவம் குறித்து ஆந்திர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ல திடுக்கிடும் தகவல் வெளியானது.வருமானத்திற்காகப் பிச்சைக்கார கும்பல் ஒன்று 9 குழந்தைகளை உடல் முழுவதும் சில்வர் பெயின்ட் அடித்துப் பிச்சையெடுக்க வைத்துள்ளனர் .
@naralokesh Good Morning Sir,it's a pleasure to write https://t.co/TPDAhiw3V1 is child I mentioned seen in kurnool City on roads brutally beaten up and not even given food.Please arrange your team and refuse https://t.co/xUUP5U7WYm dress circle shopping mall kurnool city. pic.twitter.com/Y3CENA2ne4
— Santhosh Kumar (@SanthoshKu34277) November 20, 2024
மேலும் இந்த குழந்தைகளைப் பிச்சை கும்பலிடம் இருந்து மீட்ட கர்னூல் காவல்துறை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது.