ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சஜித் கோரிக்கை
இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாதாவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
இங்கு, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவை தொடர்ந்து பேணுவதாகவும், அதற்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜப்பானினால் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவும் கலந்துகொண்டார்.