பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கல் தொடர்பில் கலந்துரையாடல்
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினை குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.