நுவரெலியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
நுவரெலியா கொத்மலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் நேற்றிரவு (30) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் வெதமுல்ல தோட்டத்தைச் சேர்ந்த 67 வயதுடைய தங்கவேல் கிருஷ்ணராஜ் என்பவரே உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை காவல்துறையினர் மற்றும் நுவரெலியா தடயவியல் காவல்துறையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.