சுவிட்சர்லாந்தில் வேட்டைக்குச் சென்றபோது தவறுதலாக நண்பரையே சுட்ட நபர்: குழப்பத்தில் பொலிசார்
சுவிட்சர்லாந்தில் நண்பர்கள் சிலர் வேட்டைக்குச் சென்றநிலையில், அவர்களில் ஒருவரை மற்றவர்களில் ஒருவர் தவறுதலாக சுட்டுவிட்டார்.
தவறுதலாக நண்பரையே சுட்ட நபர்
வெள்ளிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் நண்பர்கள் சிலர் வேட்டைக்குச் சென்றுள்ளார்கள்.
மூவரும் ஆளுக்கொரு இடத்தில் நின்று வேட்டையாட முயலும்போது, அவர்களில் ஒருவரான 64 வயது நபரை யாரோ சுட்டுவிட்டார்கள். அவர் உயிரிழந்துவிட்டார்.
ஆனால், அவரது நண்பர்களில் யார் அவரை சுட்டார்கள் என்பது தெரியாததால் பொலிசார் குழப்பமடைந்துள்ளார்கள். விசாரணை தொடர்கிறது.