நடுவரின் சர்ச்சை தீர்ப்பால் வெடித்த வன்முறை! கால்பந்து மைதானத்தில் 100 பேர் மரணம்
கினியா நாட்டில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சர்ச்சையான தீர்ப்பு
கினியாவின் N’Zerekore நகரில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. அப்போது நடுவர் சர்ச்சையான தீர்ப்பு அளித்ததையடுத்து கிளர்ச்சியடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் இருதரப்பு ரசிகர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் இந்த மோதல் வன்முறையாக மாறிய நிலையில், மைதானத்திற்கு வெளியேயும் பல ரசிகர்கள் சாலைகளில் அடிதடியில் ஈடுபட்டனர்.
100 பேர் மரணம்
வன்முறையின் உச்சமாக காவல்நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 100 கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உடல்கள் வரிசையாக உள்ளன. மற்றவை நடைபாதையில் தரையில் கிடக்கின்றன. பிணவறை நிரம்பியுள்ளது” என மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.