;
Athirady Tamil News

ஹமாஸுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

0

அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்பதற்கு முன்பாக காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) கடுமையாக எச்சரித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயத்தை தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.

பிணைக் கைதிகள்

எனினும், அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை.

நான் அமெரிக்காவின் அதிபராக பெருமையுடன் பதவியேற்கும் நாளான 2025 ஜனவரி 25ஆம் திகதிக்கு முன்பாக காசாவில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் மத்திய கிழக்கும், மனித குலத்துக்கு எதிராக இத்தகையை அட்டூழியங்களை செய்து கொண்டிருப்பவர்களும் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

இதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றிலேயே யாரும் செய்யாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். உடனடியாக பிணைக் கைதிகளை விடுவியுங்கள்.”என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம்
கடந்த வருடம்(2023) அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவர்கள் தங்கியிருக்கும் காசாவில் தீவிர தாக்குதலை நடத்திவருகிறது.

இதில், இதுவரை 43,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்பதுடன் அவர்களின் நிலை குறித்து தகவல்களும் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.